ஜனநாயக பூர்வமாக வாலிபர்கள் நடத்திய போராட்டத்தில் பள்ளிக் கரணை காவல்துறை அத்துமீறி, அராஜக தாக்குதலில் ஈடுபட்டது. போராட்ட வீரர்களை குறிவைத்து - பெண்கள் என்றும் பாராமல் பகிரங்கமாக உடைகளை களைந்தும், இழிவார்த்தைகளை இடைவிடாமல் பிரயோகித்தும் ஆண் காவலர்களே கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிரது.
அப்போது பள்ளிக் கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி வன்முறையில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் நெருங்கி, ‘நாங்கள் இப்போது ஆம்பிளைகள் என்பதைக் காட்டட்டுமா? என்று கூறி அவர்களுக்கு உளவியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு பெண்ணின் மார்பில் ஒரு அதிகாரி கை வைத்துள்ளார். கட்சிக் கொடியை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்த அந்தப் பெண்ணிடம் இருந்து கொடியைப் பறிப்பது போல மார்பில் கை வத்து, மானபங்கம் படுத்தும் வகையில் தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரமான சம்பவங்களை பாதிக்கப்படட பெண்கள் கூறுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:-