அதன்பின், காயம்பட்ட மணிகண்டனை முதுகுளத்தூர் காவல்நிலையத்திலிருந்து பரமக்குடி அரசு மருத்துவனைக்கு கொண்டுசெல்லும்போதே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டனர் எனக்கூறி ஆத்திரமடைந்த மணிகண்டனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுனர். மேலும், முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து ரராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை சம்பவ இடத்திற்க்கு வந்து மறியல் செய்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மணிகண்டன் இறப்பிற்கு காரணமானவர்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது