சுவாதி கொலையாளி ராம்குமாரின் இரத்த கறை படிந்த சட்டையை கைப்பற்றியது காவல் துறை

சனி, 2 ஜூலை 2016 (09:49 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமாரை காவல் துறையினர் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கைது செய்தனர்.


 
 
நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தின் அருகில் உள்ள சூளைமேட்டில் A.S.மேன்சனில் கடந்த 3 மாதமாக வசித்து வந்துள்ளார் ராம்குமார். கடந்த 24-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதியை கொலை செய்த ராம்குமார் தந்து ரத்தம் படிந்த சட்டையை மேன்சனில் உள்ள தனது அறையில் கழட்டி வைத்துவிட்டு சொந்த ஊருக்கு தப்பியோடியுள்ளார்.
 
இதனையடுத்து கொலையாளி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறை சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று கொலையாளியின் புகைப்படத்தை காட்டி விசாரித்து வந்தனர்.
 
காவல் துறையின் விசாரணையில் சந்தேகிக்கப்படும் குற்றவாளி A.S.மேன்சனில் தங்கியிருந்தது தெரியவந்தது. மேன்சனில் கொலையாளி ராம்குமார் குறித்த தகவல்களை பெற்ற காவல் துறை அவரது சொந்த ஊருக்கு சென்று அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
 
நேற்று நள்ளிரவு அவரை கைது செய்தது காவல் துறை. இந்நிலையில் சுவாதியை கொலை செய்தபோது ராம்குமார் அணிந்திருந்த சட்டையை இரத்த கறையோடு காவல் துறை மேன்சனில் இருந்து கைப்பற்றியதாக தகவல்கள் வருகின்றன.
 
மேலும் ராம்குமார் தங்கியிருந்த அறையில் உள்ள அனைத்து பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ராம்குமார் தங்கியிருந்த A.S.மேன்சனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்