வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடல்.. அரசு மரியாதையுடன் அடக்கம்..!
சனி, 30 செப்டம்பர் 2023 (12:44 IST)
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதை அளித்தது. சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதிசடங்கு சற்றுமுன் நடைபெற்றது.
இந்த இறுதிச்சடங்கின்போது 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது.
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமி நாதன் அவர்கள் கடந்த 28ஆம் தேதி சென்னையில் உள்ள தன் இல்லத்தில் வயது முதிர்வால் காலமானார்.