சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தூக்கில் தொங்கி தற்கொலை: திருவள்ளூரில் பரபரப்பு..!

வியாழன், 11 மே 2023 (17:20 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவலர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர் வள்ளிநாயகம். 32 வயதான இவர் சமீபத்தில் காவல்துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனை அடுத்து அவர திடீரென இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர் 
 
சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்