செல்போன் வாங்கி தரலைனா செத்துடுவேன்; மாணவியின் விபரீத முடிவு!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (12:05 IST)
திண்டுக்கல் அருகே பள்ளி மாணவி ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை படிக்க செல்போன் வசதி இல்லாத மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் முருகேசன். கூலி வேலை பார்த்து வரும் இவரது மகள் ரித்திகா 11ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகள் திறக்காததால் ஆன்லைன் வகுப்புகளை படிக்க செல்போன் வாங்கி தருமாறு தனது பெற்றோரை வற்புறுத்தி வந்துள்ளார் ரித்திகா. ஆனால் வீட்டின் வறுமை காரணமாக ரித்திகாவின் பெற்றோர்கள் செல்போன் வாங்கி தர மறுத்து விட்டனர்.

இதனால் மனமுடைந்த ரித்திகா வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரித்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்