இன்று அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
ஆனால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட டெலிபோன் உரையாடலை டெல்லி போலீஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. நாளை காலை சம்மனுடன் டெல்லி போலீஸ் சென்னை வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரா இதற்கு முன்னர் பல பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.