கொல்கத்தாவுக்கெல்லாம் போக முடியாது திரும்ப போங்க! – சைக்கிளில் வந்த குரூப்பை மடக்கிய போலீஸ்!

சனி, 25 ஏப்ரல் 2020 (16:00 IST)
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சைக்கிளில் கொல்கத்தா செல்ல முயன்ற ஊழியர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் போலீஸ்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கை அமல்படுத்தியது இந்திய அரசு. இந்நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பலர் அடிப்படை வசதிகளுக்கே அல்லாட வேண்டிய சூழல் இருப்பதாக கூறி தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாக செல்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மேட்டூர் அருகே சைக்கிளில் குழுவாக சென்று கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சிலரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும், ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும், அதனால் சைக்கிளில் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளில் சொந்த ஊர்களுக்கு செல்வது ஆபத்து என்று அவர்களுக்கு அறிவுறுத்திய போலீசார் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்து தருவாதாக வாக்களித்து அவர்களை அவர்களுடைய தங்கும் பகுதிகளுக்கு திரும்ப அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்