டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு சாவகாசமாக சரக்கு போட்ட குடிமகன்கள்!

ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (12:04 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு புகுந்து சாவகாசமாக சரக்கடித்த மதுப்பிரியர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் தண்டலச்சேரி பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு கடை விற்பனையாளர் வழக்கம்போல வியாபாரம் முடித்து கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வந்த இரண்டு பேர் டாஸ்மாக்கின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த பலவித மதுபானங்களையும் கண்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து மது அருந்த தொடங்கியுள்ளனர்.

அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸார் டாஸ்மாக் சுவரில் துளை இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். துவாரத்தின் வழியாக டார்ச் லைட் அடித்து பார்த்தபோது உள்ளே குடிமகன்கள் அமர்ந்திருந்தது தெரிந்துள்ளது.

அவர்களை வெளியேற்றிய போலீஸார் அவர்களை விசாரித்தபோது திருடுவதற்காக உள்ளே புகுந்ததையும், மதுவை கண்டதும் அமர்ந்து மது அருந்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் டாஸ்மாக்கில் திருடிய 18 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றிய போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்