சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது.. சென்னை நாள் குறித்து டாக்டர் ராமதாஸ்..!

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (12:03 IST)
சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது என சென்னை நாள் குறித்து டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக மாற்ற கடுமையாக  உழைப்போம்!
 
சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி  அதில் சென்னை மாநகரத்தை  அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை நாள்  கொண்டாடும் சென்னை மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
 
தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 384 ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்திய காவல்துறை இங்கு தான் உருவாக்கப்பட்டது; சென்னை தான் இந்தியாவின் பழமையான (மா)நகராட்சி.  சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த  மாநகராக சென்னை மாற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும்  உறுதியேற்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்