விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே அக்கட்சி பாமகவுக்கு எதிரிக்கட்சியாக இருந்துள்ளது. இப்போதும் பாமக, தேமுதிக தொண்டர்கள் அவ்வப்போது மோதிக்கொண்டேதான் இருக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக இருந்தால் அது இரு கட்சிகளின் வெற்றிகளை பாதிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாமக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது
இதனை பரிசீலித்த முதல்வர், தேமுதிக வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம். நேற்றாவது 3 தொகுதி சொல்லியிருந்தோம். இன்று 2 தொகுதிகள் மட்டுமே என்று சொல்லப்போவதாகவும் அப்படி சொன்னால் அவர்களே கூட்டணியை விட்டு சென்றுவிடுவார்கள் என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாக கூறப்படுகிறது
மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் தேமுதிகவுக்கு இரண்டு சதவிகித வாக்குகள் கூட இல்லை என்றும், அக்கட்சியால் 21 சட்டமன்ற தொகுதி தேர்தலிலும் பெரிய பயனில்லை என்றும் அதிமுக முடிவுக்கு வந்துள்ளதால், இனி டெல்லி தரப்பு அழுத்தம் கொடுத்தாலும் தேமுதிகவுக்கு இடமில்லை என்ற முடிவை அதிமுக எடுத்துவிட்டதாக தெரிகிறது.