பெரியார் சிலைக்கு உடனே கண்டனம், கந்தசஷ்டிக்கு ஒரு வாரம் கழித்து கண்டனமா? பாமகவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
திங்கள், 20 ஜூலை 2020 (20:14 IST)
கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திரையுலகினர் கூட பலர் தைரியமாக இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் இது குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அதற்கு உடனடியாக பொங்கி எழுந்த அரசியல்வாதிகள் கந்தசஷ்டி கவசம் குறித்த அவதூறு வீடியோவுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருந்தார்கள் என்றும் ஒரு சிலர் ஒரு வாரம் கழித்து கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கு ஒரு வாரம் கழித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்திய #கருப்பர்கூட்டம் யூ-ட்யூப் சேனலை தடை செய்யும்படி யூ-ட்யூப் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வின் யோசனை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சி. பா.ம.க சார்பிலும் ஆயிரக்கணக்கான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன
இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள் கந்தசஷ்டிக்கு ஒரு வாரம் கழித்து கண்டனம், பெரியார் சிலைக்கு உடனே கண்டனமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பாமக தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்