மதுரை வந்தார் மோடி: வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்
வியாழன், 1 ஏப்ரல் 2021 (21:27 IST)
மதுரை வந்தார் மோடி: வேஷ்டி சட்டையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய தலைவர்கள் அவ்வப்போது தமிழகத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
ஏற்கனவே பாஜகவின் முன்னணி தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த நிலையில் சற்று முன்னர் பிரதமர் மோடி மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரையில் இறங்கிய பிரதமர், முதலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். வேஷ்டி சட்டையை அணிந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது
இன்று இரவு மதுரையில் தங்கும் பிரதமர் மோடி நாளை காலை கன்னியாகுமரிக்கு சென்று பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் அதன்பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது