தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி “மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா நமக்கு உணர்த்தியுள்ளது. மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களால் மருந்துகளுக்கான செலவுத்தொகை குறைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்த சாதனையை இன்று தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து எனக்கு நானே முறியடித்துள்ளேன்” என கூறியுள்ளார்.