பிரதமர் மோடியின் குமரி வருகை திடீர் ரத்து: கருப்புக்கொடி எதிரொலியா?

செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:48 IST)
பிரதமர் மோடி கடந்த 10ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திருப்பூருக்கு வருகை தந்து மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மோடிக்கு திருப்பூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தபோதிலும் வழக்கம்போல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மோடிக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார். மேலும் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆனது

இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தரவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி பிரதமர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கு பதிலாக அவர் குமரிக்கு வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி வருகை தருவார் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்து கன்னியாகுமரியிலும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் பிரதமரின் குமரி வருகை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்