சென்னையை எல்லோரும் பின்பற்றுங்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய், 18 மே 2021 (18:29 IST)
சென்னையை எல்லோரும் பின்பற்றுங்கள் என பிரதமர் பாராட்டு தெரிவித்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தனது பேட்டியில் அளித்துள்ளார் 
 
அனைத்து முதல் அமைச்சர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்பதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகளை பிரதமர் மோடி பாராட்டியதாகவும் சென்னையைப் போலவே பிற நகரங்களில் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அவர் வலியுறுத்தியதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார் 
 
தமிழகத்தில் தான் செய்ய தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக கொரோனா விதிமீறல் நடந்து கொண்டிருப்பது தெரியாமல் பிரதமர் பாராட்டி உள்ளார் என்று நெட்டிசன்கள் ஒருபக்கம் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்