கிராம்பில் கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பு அதிகம் எடுத்துக்கொண்டால் திடீரென்று ரத்த சர்க்கரை அளவு குறையலாம். அதனால் கவனமாக எடுப்பது நல்லது.
இருமல், குரல் வளை அழற்சி, தொண்டை வலி மற்றும் ஜலதோஷம் போன்ற மேல் சுவாசக் கோளாறுகளை போக்க கிராம்பு உதவுகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும். கிராம்பை வாயில் போட்டு மென்று வரும் போது இரைப்பை எரிச்சல், வாய்வுத் தொல்லை போன்றவற்றை சரி செய்யும்.