’இந்த ‘’வெப் தொடரை புறக்கணிக்கிறேன் – பிரபல இயக்குநர் டுவீட்
சனி, 5 ஜூன் 2021 (18:51 IST)
சமந்தா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தி ஃபேமிலி மேன் தொடர் தமிழ் இனத்திற்கு போராடிய இயக்கத்தின் வரலாற்றை கொச்சைப்படுத்துவதாக உள்ளதால் இந்த வெப் தொடரை புறக்கணிப்பதாக இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்த தி ஃபேமிலிமேன் 2 என்ற விரைவில் அமேசான் பிரைமில் நாளை ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் ரிலீஸாகியுள்ளது.
தி ஃபேமிலிமேன் 2 தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது.
ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில், ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் நாளை ரீலீஸாக இருந்த தி ஃபேமிலி மேன் 2 தொடர் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸானது.
எனவே தற்போது, சந்தாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.
இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.@SeemanOfficial @thirumaofficial @PrimeVideoIN எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை. @SeemanOfficial@thirumaofficial@PrimeVideoINhttps://t.co/dFvoi8qTwb