அலைமோதும் கூட்டம் ... ரயில் நிலையங்களில் புது அறிவிப்பு!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:01 IST)
சென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க  நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் நேற்று பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இதனால் திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக குழந்தைகளுடன் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதனால் ரயில் நிலையமே கூட்டமாக காணப்படுகிறது. இதனிடையே சென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க  நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்