நடிகர் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வு பெற்று வருகிறார்கள். அவருடன் அவரின் இரு மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் உடன் இருக்கிறார்கள். ஆனால், அவர் அமெரிக்கா சென்றிருந்த போது, அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சிகிச்சைகாகத்தான் அங்கு சென்றதாக தமிழகத்தில் வதந்திகள் பரவியது.
இந்நிலையில் அதை நிரூபிக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் அவரின் குரு சச்சிதானந்தாவால் தொடங்கப்பட்ட ‘லோட்டஸ்’ ஆசிரமத்தில் உள்ள கோவிலில், ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சாமி கும்பிடுவது போலவும், அங்கு அவர், ஒரு பெண் துறவியுடன் அவர் சிரித்துக் கொண்டே பேசி வரும் புகைப்படத்தையும் அவரது மகள் ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.