பாஜக விளம்பரத்தில் கார்த்தி சிதம்பரம் மனைவியின் புகைப்படம்!

செவ்வாய், 30 மார்ச் 2021 (22:04 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகள் தீவிரமாக போஸ்டர்களும் விளம்பரங்களும் பிரசாரமும்  செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின்போது, செம்மொழியான தமிழ்மொழியாம் வீடியோ பாடலில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி இடம்பெற்றிருந்தார். இப்படத்தை தற்போது பாஜக தேர்தல் விளம்பரத்திற்குப் பயன்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பதிலளித்துள்ளார். அதில். தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலராது எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்