டேப் செய்யப்படுகிறதா முதல்வரின் போன்?: அதிரவைக்கும் டெல்லி!

சனி, 10 பிப்ரவரி 2018 (13:40 IST)
கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய குலாம்நபி ஆசாத் மத்திய பாஜக அரசு மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். எதிர்க்கட்சி தலைவர்களுடைய தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பெரும் புயலை கிளப்பினார்.
 
மிகவும் உண்ணிப்பாக கவனிக்க கூடிய விஷயம் இது. தங்கள் அரசியல் லாபத்திற்காக பாஜக இதனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தங்களை தீவிரவாதிகளை போல கண்காணிப்பதாக கூறியுள்ளார். இதே போல டெல்லி தரப்பு தமிழகத்திலும் போன்களை டேப் செய்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
அதில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தினகரன் ஆகியோரது தொலைப்பேசிகளும் ஒட்டுகேட்கப்படலாம் என பேசப்படுகிறது. அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பாஜக இதனை செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
தனது தொலைப்பேசி அழைப்புகள் டேப் செய்யப்படுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியுமாம். அதனால் தான் அவர் எந்த முக்கியமான விஷயங்களையும் போனில் பேசுவதில்லையாம். தனது அழைப்புகள் டேப் செய்யப்படுவதால் தான் தினகரன் ஒருமுறை போன் செய்த போது கூட எடப்பாடி பழனிச்சாமி பேசாமல், அவர் பிஸியாக இருக்கிறார் என அவரது உதவியாளர் கூறியதாக பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்