சிஏஏ எதிர்ப்பு போராட்டம்; ஜோதிமணி, திருமாவளவன் மீது வழக்கு பதிவு

Arun Prasath

புதன், 26 பிப்ரவரி 2020 (12:22 IST)
சிஏஏவுக்கு எதிராக, அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாக எம்.பி. திருமாவளவன், எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப் பதிவு

கடந்த 24 ஆம் தேதி சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், ஆகியவற்றிற்கு எதிராக திருச்சியில் புத்தாந்தம் ஜமாத் சார்பாக பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் முன் அனுமதி இன்றி பேரணியாக சென்று போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில், எம்.பி. திருமாவளவன், எம்.பி.ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, திமுக மாநில மகளிரணி துணை செயலாளர் கவிஞர் சல்மா, உள்ளிட்ட 3000 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 188 பிரிவுகளின் கீழ் புத்தாநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்