அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்!

சனி, 17 செப்டம்பர் 2016 (13:36 IST)
தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நேற்று நடந்த பொதுக்கூட்டத்தின் போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது மேடையில் விழுந்ததால் அமைச்சர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.


 
 
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருக்கும் இவர் நேற்று சேலம் மாவட்ட ஜலகண்டபுரத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர் அமர்ந்திருந்த போது அங்கு திடீரென வந்த இளைஞர் ஒருவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை அமைச்சரை நோக்கி வீசிவிட்டு ஓடியுள்ளார்.
 
அந்த பெட்ரோல் குண்டு அமைச்சரின் மேல் படாமல் பொதுக்கூட்ட மேடையில் விழுந்து மேடை தீப்பிடித்து எரிந்தது. பாதுகாப்பிற்கு நின்ற போலீசாரும், தொண்டர்களும் தீயை அனைத்தனர். அமைச்சட் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
 
அமைச்சரின் மீது பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வீசிய வாலிபரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்