68வது நாளாக உயராத பெட்ரோல், டீசல் விலை!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (07:52 IST)
சென்னையில் கடந்த 67 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் 68வது நாளாக இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் கணக்கில் கொண்டு மத்திய அரசு கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 என்றும் சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
5 மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்