இந்த வீடியோவை பாருங்கள்; முடிவை மாற்றவும்: மன்னிப்பு வழியில் வலியுறுத்தும் பீட்டா

ஞாயிறு, 29 ஜனவரி 2017 (11:37 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா கருத்து தெரிவித்தது சிங்கம்-3 படத்திற்கு விளம்பரம் செய்வதற்கு என்று பீட்டா கருத்து தெரிவித்தது. இதையடுத்து பீட்டா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து பீட்டாவின் இந்தியா சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர். நடிகர் சூர்யாவும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பீட்டா நிறுவனம் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் சிங்கம்-3 படத்துக்கு விளம்பரம் செய்கிறார் என்று தெரிவித்தது.
 
இதற்கு சூர்யா பீட்டா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். தற்போது பீட்டா நிறுவனத்தின் இந்தியா சி.இ.ஓ. பூர்வா ஜோஷிபுரா மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
 
அந்த கடிதத்தில்,
 
சிங்கம் படத்தில் நீங்கள் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள். இந்த வீடியோ அரசாங்க அதிகாரிகளால் எடுக்கப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவது உள்ளது. எங்களின் நடவடிக்கையை பாராட்ட உங்கள் கதாபாத்திரம் உதவும்.
 
இவ்வாறு அந்த கடித்தத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்