60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த நபரை உயிருடன் மீட்ட -தீயணைப்பு வீரர்கள்!

J.Durai

புதன், 12 ஜூன் 2024 (13:54 IST)
சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் கோட்டியப்பன் மகன் மாடசாமி (72) இவர் நேற்று விவசாய பணிகளை முடித்து விட்டு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த 60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழந்து விட்டார்.
 
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்
 
தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் போக்குவரத்து துறை பால சந்திரன்,சிறப்பு அலுவலர் ரவீந்திரன், ராஜா, சண்முக ராஜன் சரவணக்குமார், விவேகானந்தன் செல்வம் ஆகியோர் விரைந்து சென்று கயறு கட்டி இறங்கி அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
கிணற்றில் விழுந்தவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்