கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை, பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வேதனை தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அடிக்கடி வரும் முதல்வர், இன்றைக்கும் 38 உயிர்கள் இறந்த போதும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா, வெறும் தேர்தலை மட்டுமே மையாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள் என்றும் வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடக்கிறதே தவிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்தவித திட்டங்களும் தமிழ்நாட்டில் நடந்ததாக தெரியவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.