ஒருபக்கம் பாஜகவினர் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக அமைச்சர்களோ பெரியாருக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் சாலைவாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.