போலீசாருடன் மோதும் பொதுமக்கள் ; தொடரும் கலவரம் : தூத்துக்குடியில் பதட்டம்

புதன், 23 மே 2018 (17:29 IST)
தூத்துக்குடியில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான மோதல் முடிவிற்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 
தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.  
 
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று தூத்துக்குடி அண்னாநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம், உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு இன்று காலை ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுவீசியும் போலீசார் அவர்கள கலைத்தனர். இதனால், கோபமடைந்த சிலர் போலீசாரின் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்தனர்.
 
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்ற வாலிபர் மரணமைடந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் போலீசாரின் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் போலீசாரை நோக்கி கற்கள், பெட்ரோல் குண்டு, பாட்டில்கள் ஆகியவற்றி வீசி வருகின்றனர். குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணிக்காக சென்ற போது அப்பகுதி மக்கள் போலீசார் மீது கற்களை வீசு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இப்படி தொடர் மோதலில் மக்கள் ஈடுபடுவதும், போலீசார் திருப்பி தாக்குவதும், துப்பாக்கிச்சூடு நடத்துதும், உயிர் பலி தொடர்வதும், தூத்துக்குடியில் போராட்டம் எப்போது முடிவிற்கு வரும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்