மதுபோதையில் பெண்ணிடம் சேட்டை: தலைமை காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

திங்கள், 7 டிசம்பர் 2020 (13:16 IST)
மதுபோதையில் பெண்ணிடம் சேட்டை: தலைமை காவலருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
சென்னை வடபழனி அருகே தலைமை காவலர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த காவலரை அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ஒருவர் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சென்னை வடபழனி அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ததாக தெரிகிறது 
 
இதனை அடுத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட, உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூடி போதையில் இருந்த தலைமை காவலரை அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்தனர். அந்த பெண்ணும் செருப்பை எடுத்து தலைமைக் காவலரை அடித்தார் 
 
இதன் பின்னர் அந்த தலைமை காவலர் வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார் இதுகுறித்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி செய்ததை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்