கமல்ஹாசனை சோலியை முடித்த பழ.கருப்பையா.. அடுத்த டார்கெட் விஜய்க்கா?

Siva

ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (14:58 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய போது திமுக உள்பட திராவிட கட்சிகளை வீழ்த்தும் ஒரே கட்சி இதுதான் என கூறியவர் பழ.கருப்பையா. மேலும் அந்த கட்சியில் அவர் ஒரு நிர்வாகியாகவும் செயல்பட்டார் என்பதும், தேர்தலிலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி தற்போது சொந்தமாக தனிக்கட்சி வைத்து நடத்தி வருகிறார் பழ.கருப்பையா.  இந்த நிலையில் விஜய் நேற்று முன் தினம் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக அறிவித்த நிலையில் அந்த கட்சி குறித்து பழ.கருப்பையா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திமுக அதிமுக பாஜக கட்சிகளுக்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால் விஜய்க்கு கூடும் அவர்கள் அப்படி அல்ல. திமுகவை ஒழிப்பதற்கு விஜய் பயன்படுவார் என்றால் அதுதான் என்னை பொருத்தவரை மிகப் பெரிய தொண்டு என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தபோது இதையேதான் அவர் கூறினார் என்பதும் தற்போது விஜய்க்கும் அதையே கூறியுள்ளதால் கமல்ஹாசனின் கட்சியை சோலியை முடித்ததை அடுத்து விஜய் கட்சியையும்  அவர் சோலியை முடிக்க போகிறாரா என நெட்டிசன் கேள்வி எழுப்பு வருகின்றனர்

விஜய் நடித்த சர்தார் திரைப்படத்தில் பழ.கருப்பையா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்