நாடாளுமன்ற விவகாரம்: தவறுதலாக செய்யப்பட்ட சஸ்பெண்ட் திரும்ப பெறுவதாக அறிவிப்பு..!

வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:57 IST)
நாடாளுமன்றத்தில் நேற்று 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதில் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வராதவர் என்பது தெரிய வந்ததை அடுத்து அவருடைய சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் கனிமொழி, ஜோதிமணி உள்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்பிகளில் எஸ் ஆர் பார்த்திபன் என்பவர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து பாராளுமன்றத்திற்கு வராத ஒருவரை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம் என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தற்போது அவரது சஸ்பெண்ட் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்