மாணவர்களுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் அனுமதி கூடாது: காவல்துறை அறிவுரை

வெள்ளி, 1 ஜூலை 2016 (16:16 IST)
மாணவ-மாணவிகள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் தொடங்க அவரது பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
 

 


 
சேலம் மாவட்டத்தில் வினுப்பிரியா தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் காதல் விவகாரத்தில் ஃபேஸ்புக்கில் பழி வாங்குவது வழக்கம் ஆகிவிட்டது. அதனால் சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் சுமித்சரண் இன்று அறிக்கை இன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
வாட்ஸ்அப்  மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொது மக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்கள் போல தகவல் பரிமாற்றம் செய்வார்கள்.
 
தகவல் பரிமாற்றம் மூலம் ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்று ஆசையை காட்டி அழைத்து திருமணம் ஆசையை ஏற்படுத்தி, அவர்களுக்குன் தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டி, இணையதளத்திலும் வெளியிடுவார்கள்.
 
எனவே தங்கள் குழந்தைகள் வட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை துவங்காமல் பார்த்து கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்