கலகலக்கும் அரசு பள்ளி அட்மிசன்கள்! – கொண்டாட்டத்தில் அரசு பள்ளிகள்!

செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:55 IST)
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அட்மிசன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் சேர்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பள்ளிகளுக்கான அட்மிசன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு அரசு பள்ளி சேர்க்கைகளை விட 3 மடங்கு அதிகமாகும். மேலும் செப்டம்பர் இறுதி வரை அட்மிசன் நடைபெற உள்ளதால் அட்மிசன் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அரசு பள்ளிகளுக்கு ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்