மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது! – பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்!
வியாழன், 17 ஜூன் 2021 (10:44 IST)
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் பள்ளிகள் திறந்து மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அட்மிசன் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர் சேர்க்கையின்போது விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர் சேர்க்கை அரசு வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் என்றும், எந்த நிபந்தனையின் அடிப்படையிலும் அட்மிசன் பணிகளை நிறுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.