எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றிருந்தார். அதனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் பாஜக இருக்கும் அதிமுக கூட்டணியிலேயே இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்ப்பட்டது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக பாரிவேந்தர் திமுக கூட்டணியில் இணைந்தார்.
அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமகதான். கடந்த சிலா ஆண்டுகளாக பாமகவுக்கும் பாரிவேந்தருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அதனாலேயே திமுக கூட்டணியில் இணைந்ததாக பாரிவேந்தர் கூறினார். திமுகவும் அவருக்கு ஒருத் தொகுதியை ஒதுக்கியது. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒத்துக்கொண்ட பாரிவேந்தர் கள்ளக்குறிச்சி தொகுதி வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
ஆனால் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தன் மகனுக்காக அந்த தொகுதியைக் கேட்டு பெற்றுள்ளதாக தெரிகிறது. அதனால் பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பாரிவேந்தர் கடும் அப்செட்டில் உள்ளார். எந்த அளவுக்கென்றால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிடலாமா என்று யோசிக்கும் அளவிற்கு அதிருப்தியடைந்துள்ளாராம். திமுக அவரிடம் சமாதானப் பேச்சுக்கு முன்வருமா அல்லது அவர் விருப்பப்படி விட்டுவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.