தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - எங்கெங்கு கனமழை?

புதன், 2 மார்ச் 2022 (14:01 IST)
காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதால் மார்ச் 4ம் தேதி தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் 4 ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே  65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
 
அதே போல 4 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதாலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்