தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

புதன், 8 நவம்பர் 2023 (14:33 IST)
தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு அரபி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து குமரி பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களால் தமிழகம் முழுவதற்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அதேபோல் ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட தமிழக முழுவதும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்