வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதே இந்த மழைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகத்தில் மழையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை பொருத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.