நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி: ஓபிஎஸ் வாழ்த்து!

வியாழன், 10 மார்ச் 2022 (17:36 IST)
பாஜக நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்க உள்ள நிலையில் இதற்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,  உத்தரபிரதேசம்,  உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தல்.
 
மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக தான் உத்தரபிரதேசத்திலும் உத்தராகண்டிலும், மணிப்பூரிலும் கோவாவிலும் ஆட்சியில் இருந்தது. இதனால் பாஜக வை  வீழ்ந்த காங்கிரஸ், சமாத்வாதி, ஆம் ஆத்மி, திரினாமுள்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில் ஐந்து மா நில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவருகிறது. இதில், உத்தரபிரதேசத்தில் பாஜக 260, சமாஜ்வாடி 136  இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளில்  ஆம் ஆத்மி 85 இடங்களில்  வெற்றி பெற்று  பெரும்பான்மைக்கும் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் 25  இடங்களிலும்   முன்னிலை வகிக்கிறது.
 
உத்தரகாண்டில் பாஜக 48 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கோவாவில் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னலை வகிக்கிறது. மணிப்பூரில் பாஜக 27 இடங்களிலும் காங்கிரஸ் 06 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இந்தியாவில் பாஜக ஆளும்  மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிக்கும் என தெரிகிறது.
 
இதனிடையே பாஜக நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்க உள்ள நிலையில் இதற்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் திறமையான ஆளுமை மற்றும் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்