மத்திய அரசு கடந்த ஆண்டு வேளான் சட்ட திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதராவாகவும் இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவந்தாலும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
இதனை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது நிலையை கண்ணதாசன் பாடல்வரிகளைக் கொண்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். ஆம், தம்முடைய தனிப்பட்ட நிலையை எண்ணும்போது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருவதாகவும், அது. நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என்றார்.