அதிமுக தொண்டர்களின் எண்ணங்கள்தான் இந்த தீர்ப்பு: ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்

வியாழன், 23 ஜூன் 2022 (08:10 IST)
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்பட தனிப்பட்ட தீர்மானங்கள் எதையும்  நிறைவேற்றக் கூடாது என நேற்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த உத்தரவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைவராக பொதுக் குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட முடியாத நிலையில் உள்ளார். இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் ஓபிஎஸ் மகனும் மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் கூறியதாவது:
 
நேற்று வந்திருக்கிற தீர்ப்பு ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது என்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கட்சிக்கு ஆதரவாக கிடைத்த தீர்ப்பு என்றும் கூறினார்.
 
மேலும் நேற்று தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆக ஒருவரையும், புரட்சி தலைவி அம்மா ஆக ஒருவரையுமாக தான் அதிமுக தொண்டர்கள் பார்த்து வருகின்றனர் என்று கூறினார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்