அண்ணாமலையை சந்திக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்.. அவர் தான் முடிவெடுப்பாரா?

சனி, 21 ஜனவரி 2023 (13:35 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்களை தரப்பு தற்போது சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தங்கள் பிரிவுக்கு ஆதரவு கேட்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
அண்ணாமலை இருவரில் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பாரா அல்லது பாஜக அந்த தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
பாஜகவின் ஆளுமை இல்லாமல் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரிவு வேட்பாளரை அறிவிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அண்ணாமலையை பார்க்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்