ஆன்லைன் வகுப்புகளை விரும்பினால் நடத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

திங்கள், 31 ஜனவரி 2022 (14:37 IST)
நாளை முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்பையும் நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்பை நடத்தலாம் என்றும் நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பள்ளிகள் திறப்பது குறித்த  வழிகாட்டும் நெறிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கொரோனா அறிகுறிகள் தென்படும் மாணவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நேரடி வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு முகக்கவசம்  கட்டாயம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்றும் வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்