முதலில் www.pdsportal.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் ஹோம் பக்கத்தில் மேல் இடது பக்கத்தில் உள்ள மாநில அரசு இணையதளங்கள் என்பதை கிளிக் செய்தால் மாநில பட்டியல் வரும். அதில் நாம் எந்த மாநிலத்தில் இருக்கின்றோமோ, அந்த மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின்னர் ஓப்பன் ஆகும் மற்றொரு பக்கத்தில் ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம் அல்லது ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம் தொடர்பான பொருத்தமான லிங்கை தேர்வு செய்ய வேண்டும். இதில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து உள்ளே நுழைந்து புதிய முகவரி குறித்த விபரங்களை நிரப்பி, பின்னர் ஓகே செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம். இவ்வாறு இனிமேல் ஆன்லைனில் ஒருசில நிமிடங்களில் ரேசன் கார்டில் முகவரி மாற்றி கொள்ளலாம்.