வாக்குப்பதிவு நாளான இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அரியலூரில் கொட்டும் மழையில் வாக்களிக்க சென்ற பெண் ஒருவர் வாக்களித்து விட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்தபொழுது மின்னல் தாக்கி உடல் கருகி பலியானார். இதனால் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மேலும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருத்துறைப் பூண்டி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், மதுரை, நாகப்பட்டினம், தேனி, அரியலூர், நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.