மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை: என்ன காரணம்?

வியாழன், 25 நவம்பர் 2021 (15:28 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு வாரம் விடுமுறை: என்ன காரணம்?
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஒரு வாரம் விடுமுறை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் படித்து வரும் 2 மாணவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் அந்த இரண்டு மாணவர்களால் வேறு சில மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனைவருக்கும் பரிசோதனை செய்வதற்காக கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. 
 
இந்த நிலையில் ஏழு நாட்களுக்கு பல்கலைக்கழக விடுதிக்கு விடுமுறை அளிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்கள் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்