கமல் தலைமையில் புதிய 'மக்கள் நல கூட்டணியா?

ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (13:20 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சியை வரும் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அவரை பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், எதிர்கால கூட்டணிக்கு அச்சாரமாகவே இந்த சந்திப்புகளை அரசியல் விமர்சகர்கள் பார்த்து வருகின்றனர்.
 
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அரசு அமைய வேண்டும் என்று மக்களின் நாடித்துடிப்பு இருப்பதை நன்கு புரிந்து கொண்ட கமல்ஹாசன், இந்த இரு கட்சிகள் அல்லாத ஒரு புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
 
அதன் விளைவுகள் தான் திருமாவளவன் புத்தக வெளியீட்டுக்கு கமல் அழைப்பு, நல்லக்கண்ணு-கமல் சந்திப்பு ஆகியவற்றை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். வைகோ, திமுக பக்கம் சென்றுவிட்டதால் அவரை தவிர வாசன் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை கமல் தலைமையில் ஒன்றிணையும் என்றும், இது கிட்டத்தட்ட புதிய மக்கள் நல கூட்டணி போல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்