அதில், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் 36 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. முக்கியமாக காலை 7. 50 மணி முதல், மதியம் 1. 50 மணிவரை மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படவும் என்றும், பின்னர் மதியம் 2 மணி முதல் இவ்வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 முதல் மதியம் 3.10 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்படும். அதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.